/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டல் உரிமையாளர்களுடன் டி.எஸ்.பி., ஆலோசனை
/
ஓட்டல் உரிமையாளர்களுடன் டி.எஸ்.பி., ஆலோசனை
ADDED : டிச 09, 2025 06:06 AM

கோட்டக்குப்பம்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோட்டக்குப்பத்தில் ஓட்டல், கெஸ்ட் அவுஸ் உரிமையாளர்களுடன் காவல் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வரவேற்றார். கூட்டத்தில் டி.எஸ்.பி., ரூபன்குமார் வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தங்கும் விடுதிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பேசுகையில், 'புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தினால் போலீசாரிடம் அவசியம் அனுமதி பெற வேண்டும்.
விடுதிக்கு வரும் விருந்தினர்களின் அடையாள அட்டைகளை பெற்ற பிறகே அறைகள் வழங்க வேண்டும். அறைகளில் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
விடுதிகளில் தங்குபவர்களின் விபரங்களை முறையாக பதிவேட்டில் பதிய வேண்டும். அனைத்து தங்கும் விடுதிகளிலும் கட்டாயம் கேமரா பொருத்தி இருக்க வேண்டும். அறைகளில் தங்குபவர்கள் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தினால் விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார். கோட்டக்குப்பம், தந்திரயான்குப்பம், நடுக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதி உரிமையாளர்கள், மேலாளர்கள் பங் கேற்றனர்.

