/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனமழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து... கணக்கெடுப்பு: இதுவரை 198 ஹெக்டேர் நெல், 50 ஹெக்டேர் உளுந்து சேதம்
/
கனமழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து... கணக்கெடுப்பு: இதுவரை 198 ஹெக்டேர் நெல், 50 ஹெக்டேர் உளுந்து சேதம்
கனமழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து... கணக்கெடுப்பு: இதுவரை 198 ஹெக்டேர் நெல், 50 ஹெக்டேர் உளுந்து சேதம்
கனமழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து... கணக்கெடுப்பு: இதுவரை 198 ஹெக்டேர் நெல், 50 ஹெக்டேர் உளுந்து சேதம்
UPDATED : டிச 09, 2025 06:08 AM
ADDED : டிச 09, 2025 06:06 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தின் வழியே ஓடும் தென்பெண்ணை, சங்கராபரணி ஆகிய ஆறுகளும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகள், மாவட்ட விவசாயத்தின் நீர் ஆதாரமாக உள்ளன.
இந்த மாவட்டத்தின் மேற்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து, உபரி நீர் ஏரிகளில் நிரம்பும். மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1060.30 மி.மீ., ஆகும். இதில், தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழை 638.11 மி.மீ., என ஆண்டின் சராசரி மழை அளவாக உள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையால், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.
மாவட்டத்தின் இயல்பான மழையளவான 1060.30 மில்லி மீட்டரில், கடந்த 5ம் தேதி வரை 1061 மீ.மீ., மழை பெய்துள்ளது.
இதனால், மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 68 ஆயிரத்து 95 ஹெக்ேடர் நெல், 16 ஆயிரத்து 345 ஹெக்ேடர் உளுந்து, 7432 ஹெக்ேடர் வேர்க்கடலை, 12 ஆயிரத்து 29 ஹெக்ேடர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில், கடந்த வாரத்தில் 2 நாட்களில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து சேதமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் கன மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மழை நின்ற நிலையில், 33 சதவீதத்திற்கு மேல் பயிர் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. இதில், 198 ஹெக்ேடர் நெல், 50 ஹெக்ேடர் உளுந்து, 5 எக்டர் வேர்க்கடலை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கான உரிய போட்டோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன், பயிர் சேதம் குறித்த விவரத்தை அதிகாரிகள், அரசிற்கு அனுப்பி உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தேங்கியுள்ள மழைநீரை வடிகட்டி, நெற்பயிரில் கோனோவீடர் மூலம் களையெடுத்து பயிருக்கு காற்றோட்டம் அளிக்க வேண்டும். வளர்ச்சி பருவத்தில் உள்ள நெல் பயிருக்கு ஏக்கருக்கு 15 கிலோ என்ற அளவில் யூரியா உரம் மண்ணில் இட வேண்டும். அல்லது 1 சதவீதம் யூரியா மற்றும் 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். 0.5 சதவீதம் சிங்க் சல்பேட் கரைசல் தெளித்து பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.

