நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 75; பார்வை குறைபாடு உள்ளவர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த 22ம் தேதி பூச்சி மருந்தை குடித்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

