ADDED : மார் 12, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த சொர்ணாவூர், கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுந்தரமூர்த்தி, 61; விவசாய தொழிலாளி. இவர், தனது மகள் மஞ்சுளா வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிற்பகல், வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், கலிஞ்சிக்குப்பம் - மடுகரை சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

