ADDED : டிச 06, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : திண்டிவனம் அருகே பைக் மோதி முதியவர் இறந்தார்.
திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்த சாமிகண்ணு, 75; இவர் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு செஞ்சி செல்ல குடும்பத்தோடு, திண்டிவனம் - செஞ்சி சாலையில் ஓரமாக பஸ்சுக்காக நின்றிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த பைக், சாமிக்கண்ணு மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் இறந்தார்.
ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும் ஒரு விபத்து
வெள்ளிமேடுபேட்டை அடுத்த வடசிறுவலுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 60; விவசாயி. இவர், நேற்று காலை வெள்ளிமேடுபேட்டையிலிருந்து தெள்ளார் நோக்கி தனது நிலத்திற்கு நடந்து சென்ற போது பின்னால் வந்த லாரி ஆறுமுகம் மீது மோதியது.
படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.