ADDED : நவ 06, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது அரசு பஸ் மோதி இறந்தார்.
திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 75; இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் வந்தவாசி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, திருவண்ணாமலை மார்க்கமாக சென்ற அரசு பஸ், முருகேசன் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.