நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மயிலம் அருகே உள்ள தழுதாளி கிராமம், ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம், 59; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 12ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டவுடன் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.
மயிலம் போலீசார் வழக்கு பதித்து விசாரணை செய்து வருகின்றனர்.