/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேன் டயர் வெடித்து விபத்து மூதாட்டி பலி
/
வேன் டயர் வெடித்து விபத்து மூதாட்டி பலி
ADDED : ஏப் 08, 2025 04:24 AM
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் டயர் வெடித்து நிழற்குடை மீது மோதி விபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பூ.மடுவாங்கரை பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மனைவி தேன்மொழி, 60; இவர் உறவினர்களுடன், கடந்த மாதம் 16ஆம் தேதி, விழுப்புரம் கல்பட்டு கிராமத்தில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு வேனில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊருக்கு வேன் புறப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமம் வழியாக சென்றபோது, வேனின் வலது பக்க முன் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள நிழற்குடை மீது மோதி விபத்துக்குள்ளானது.
வேனில் பயணம் செய்த தேன்மொழி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிதம்பரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேன்மொழி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.