/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகையை ஏமாற்றிய தம்பதி மீது எஸ்.பி., ஆபிசில் மூதாட்டி புகார்
/
நகையை ஏமாற்றிய தம்பதி மீது எஸ்.பி., ஆபிசில் மூதாட்டி புகார்
நகையை ஏமாற்றிய தம்பதி மீது எஸ்.பி., ஆபிசில் மூதாட்டி புகார்
நகையை ஏமாற்றிய தம்பதி மீது எஸ்.பி., ஆபிசில் மூதாட்டி புகார்
ADDED : மார் 23, 2026 10:38 PM
விழுப்புரம்: நகையை ஏமாற்றிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் மூதாட்டி புகார் மனு கொடுத்தார்.
விழுப்புரம் அடுத்த சேஷாங்கனுாரைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி பூங்காவனம், 95; அளித்துள்ள மனு;
கடந்த 2021ம் ஆண்டு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், என்னிடம் இருந்து அரை சவரன் தங்க மோதிரத்தை அவசர தேவைக்காக வாங்கிச்சென்றனர். அந்த நகையை பலமுறை திருப்பிக்கேட்டும், இதுவரை கொடுக்கவில்லை. இது குறித்து கடந்த 12ம் தேதி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். அங்கிருந்து என்னை கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு, அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து நான் பலமுறை கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்றும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, என்னிடம் நகையை ஏமாற்றிய தம்பதி மீது எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.