/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் முகமை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
/
தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் முகமை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் முகமை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் முகமை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 18, 2026 05:01 AM

விழுப்புரம்: சட்டசபை தேர்தலையொட்டி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள், தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் முகமை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரி ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கணக்கில் வராத பணம் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், பரிசு பொருட்கள், மதுபானங்கள் குறித்தும், மறைமுக செலவினங்கள் கண்டறிவது.
வேட்பாளர் செலவினங்கள், கட்சி செலவினங்கள், சட்டவிரோத பண விநியோகம், பணம் பெற்று கொண்டு வெளியிடப்படும் செய்திகள், விளம்பரங்கள், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு ஆகியவற்றை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி பேசியதாவது:
சட்டவிரோதமாக பணம், மதுபானம், போதை பொருள், பரிசு பொருட்களை வழங்கப்பட்டால் அதை பறிமுதல் செய்து, புலனாய்வு தகவல் சேகரித்து முதல் தகவல் அறிக்கை பதிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்திய நிலையில் டாஸ்மாக் கடையில் மொத்தமாக மது விற்பனை செய்யக் கூடாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக அதிக எண்ணிக்கையிலான மதுபானங்களை சேகரித்து வைத்திருக்கக் கூடாது.
பிற மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள், ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். சட்டவிரோத போக்குவரத்திற்காக வனப்பாதையை தவறாக பயன்படுத்துதல் மற்றும் தொலைதுார எல்லைபுற வனப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணிகளில் வனத்துறை அலுவலர்கள் இருக்க வேண்டும்.
இந்த பணிகளில் அமலாக்கத்துறை அலுவலர்கள், தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் முகமை அலுவலர்கள், சுங்கத்துறை அலுவலர்கள், கலால் மேற்பார்வையாளர்கள், டாஸ்மாக் நிர்வாக அலுவலர்கள், வருமானவரித்துறை, வணிகவரி அலுவலர்கள், வங்கியாளர்கள், கூட்டுறவு, வனம், காவல் துறை அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி பேசினார்.
மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார் உட்பட அமலாக்கத்துறை அலுவலர்கள், தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் முகமை அலுவலர்கள் பங்கேற்றனர்.

