/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 18, 2024 08:03 PM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
இதில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் வெங்கடேஷ் கலந்து கொண்டு பேசுகையில், 'மாவட்டத்தில் 1970 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடக்கிறது.
முகாம்களில், பொதுமக்களுக்குத் தேவையான படிவங்களை விநியோகம் செய்ய வேண்டும். வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக ஊடக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

