வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: எம்.எல்.ஏ., பார்வை
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: எம்.எல்.ஏ., பார்வை
UPDATED : நவ 21, 2026 03:59 PM
ADDED : நவ 21, 2026 03:59 PM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி பனையபுரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாமை சிவக்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு பயனாளிகளிடம் பெயர் சேர்த்தல் மனுவைப் பெற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கோபாலகிருஷ்ணன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ரவி, மாவட்ட துணைச் செயலாளர் முருகன், ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் ரகு சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
