/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : நவ 17, 2024 03:16 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாமை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
திண்டிவனத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இதில் திண்டிவனத்தில் மார்க்கெட் கமிட்டி, நாகம்மாள் நடுநிலைப்பள்ளி, அய்யந்தோப்பு அரசு பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களை திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், நிர்வாகிகள் உதய்குமார், ஜாகீர்உசேன், பன்னீர்செல்வம், குமரன் உட்பட பலர் உடனிருந்தனர்.