/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்து ஏற்படும் பகுதியில் மின் விளக்கு வசதி
/
விபத்து ஏற்படும் பகுதியில் மின் விளக்கு வசதி
ADDED : நவ 11, 2024 05:36 AM
விக்கிரவாண்டி: திண்டிவனம் - உளுந்துார்பேட்டையிடையே அதிக விபத்துகள் ஏற்படும் 14 இடங்களில் நகாய் திட்ட இயக்குனர் உத்தரவின் பேரில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது.
கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சிவாச், நகாய் திட்ட இயக்குனர் வரதராஜன் ஆகியோர் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களை சில தினங்களுக்கு முன் கள ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் உயர் மின் விளக்கு வசதி அமைக்க வேண்டும் என நான்கு வழிச் சாலையை பராமரிக்கும் விக்கிரவாண்டி டோல் கேட் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
அதன்பேரில் விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார், திட்ட மேலாளர் சதீஷ்குமார் மேற்பார்வையில் திண்டிவனம் - உளுந்துார்பேட்டை இடையே விளங்கம்பாடி, பாதிராபுலியூர், பேரணி கூட்ரோடு, விக்கிரவாண்டி தெற்கு பைபாஸ் முனை, ஊழியர் நகர், மாமந்துார் சமத்துவபுரம், மாமந்துார் வி.ஆர்.எஸ்., கல்லுாரி, பிடாகம், சித்தானங்கூர், ஆலங்கால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேந்தமங்கலம் ,பெரியாங்குப்பம், சின்னகுப்பம், காந்திநகர் ஆகிய 14 இடங்களில் உயர் மின் விளக்கு வசதியை ஏற்படுத்தினர்.