/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் ஒப்பந்த பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
மின் ஒப்பந்த பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
மின் ஒப்பந்த பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
மின் ஒப்பந்த பணியாளர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 29, 2025 07:29 AM
விழுப்புரம்: தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் திருமலை, வட்ட பொருளாளர் தேவதாஸ், அமைப்பு செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கணக்கீட்டாளரில் இருந்து கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வை காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு உள்முக தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோட்ட செயலாளர் கன்னியப்பன் நன்றி கூறினார்.