/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்வாரிய பொறியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
மின்வாரிய பொறியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 30, 2024 06:15 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மின்வாரிய அனைத்து பணியாளர் பொறியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, வட்ட தலைவர் குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் பிரபாகரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள் அகில இந்திய சங்க நிர்வாகிகள் சமர்சின்ஹா, சோமசேகர், அனவரதன் பங்கேற்றனர். மாநில, மண்டல, வட்ட, கோட்ட பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மின்வாரியம் பொது துறையாக தொடர வேண்டும், களப்பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
துணை மின் நிலையங்களில் முறை பணி பார்க்க இளமின் பொறியாளர் 2ம் நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கண்டமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெங்கட்ரமணன் நன்றி கூறினார்.