/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்வாரிய கணினி மையங்கள் இரு தினங்கள் இயங்காது
/
மின்வாரிய கணினி மையங்கள் இரு தினங்கள் இயங்காது
ADDED : மார் 19, 2026 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, விழுப்புரம், கண்டமங்கலம், செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணைநல்லுார் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும், மின்வாரிய கணினி வசூல் மையங்கள் தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இதனால், இந்த மின்வாரிய அலுவலங்களில், வரும் 21ம் தேதி காலை 6:00 மணி முதல் 22ம் தேதி இரவு 12:00 மணி வரை, மேற்கண்ட அலுவலகங்களில் இணைய வழி சேவை செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

