/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் இன்று தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

ADDED : மார் 19, 2026 03:58 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று (19 ம் தேதி) தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை :
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம் இன்று (19 ம் தேதி) மாலை 4 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடக்கிறது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்குகிறார்.
மாநில துணை பொது செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், தலைமை கழக தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், ஜெயராஜ், தலைமை கழக வழக்கறிஞர் சுவை சுரேஷ், மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், கற்பகம் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.