/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் வாரிய குறைகேட்பு நாளை சிறப்பு முகாம்
/
மின் வாரிய குறைகேட்பு நாளை சிறப்பு முகாம்
ADDED : ஏப் 04, 2025 04:31 AM
விழுப்புரம்: விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் மின் நுகர்வோர்களின் குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை (5ம் தேதி) நடக்கிறது.
விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் செய்திக்குறிப்பு:
மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் சிறப்பு முகாம் நாளை காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
முகாமில், பொதுமக்கள் மின் மீட்டர் பழுது, மாற்றம், குறைந்த மின்னழுத்தம், மின் கட்டண பிரச்னை, சேதமடைந்த கம்பங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். முகாம், விழுப்புரத்தில் பவர் ஹவுஸ் சாலையில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செயற்பொறியாளர்கள் செஞ்சி, கண்டமங்கலம், திண்டிவனம் அலுவலகங்களில் நடக்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.