/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்
ADDED : பிப் 27, 2026 04:49 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம், வாரந்தோறும் நடைபெறுகிறது.
விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
விழுப்புரம் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோரின் குறைகளை தீர்க்கும் வகையில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், கோட்ட அளவில் மாதாந்திர குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதன்படி, வரும் மார்ச் மாதம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் நான்காவது வியாழக்கிழமைகளில் காலை 11:00 மணியளவில், பொதுமக்கள் குறை தீர் கூட்டம் செய்பொறியாளர் அலுவலங்களில் நடைபெற உள்ளது.
மேலும், வரும் மார்ச் 3ம் தேதி விழுப்புரம், 10ம் தேதி கண்டமங்கலம், 17ம் தேதி செஞ்சி, 24ம் தேதி திண்டிவனம், 26ம் தேதி திருவெண்ணெய்நல்லுாரில் நடைபெறுகிறது. மின்நுகர்வோர் தங்களின் குறைகளை தெரிவித்து பயனடை யலாம்.

