/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பண பரிவர்த்தனை
/
வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பண பரிவர்த்தனை
ADDED : செப் 22, 2024 02:31 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பண பரிவர்த்தனை வசதி தொடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கண்டமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுமதி செய்திக்குறிப்பு:
கண்டமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்க கண்டமங்கலம், சித்தலம்பட்டு மற்றும் சொர்ணாவூர் ஆகிய இடங்களில் வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தற்போது முதல் கட்டமாக கண்டமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகள் மற்றும் இதர இடுபொருட்களை ஏ.டி.எம்., கார்டு (டெபிட், கிரெடிட் கார்டுகள்) கூகுள் பே, போன் பே உள்ளிட்ட மின்னணு வசதி கொண்ட பணமில்லா பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் பணம் செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக கண்டமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் பணமில்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் இதனை பயன்படுத்தி மின்னணு பண பரிவர்த்தனை செய்திடலாம். மேலும், படிப்படியாக சித்தலம்பட்டு மற்றும் சொர்ணாவூர் துணை வேளாண் விரிவாக்க மையங்களிலும் மின்னணு கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.