/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பை தீயால் எரிந்து சேதம்
/
எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பை தீயால் எரிந்து சேதம்
எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பை தீயால் எரிந்து சேதம்
எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பை தீயால் எரிந்து சேதம்
ADDED : மார் 22, 2025 03:50 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் குப்பையில் ஏற்பட்ட தீயால் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமானது.
திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ, 58; நேரு வீதியில் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
கடையில் இருந்த எல்.இ.டி., 'டிவி'க்கள் மற்றும் உதிரி பாகங்களை வீட்டில் உள்ள 3வது மாடியில் வைத்திருந்தார். நேற்று முன்தினம், வீட்டின் அருகே உள்ள குப்பைகளை எரித்தபோது, அதிலிருந்து தீப்பொறி இளங்கோ வீட்டிலிருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பட்டு தீப்பிடித்து எரிந்தது.
திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமானது.