/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யானை தந்த பொம்மை கடத்தல் கும்பல் வனத்துறை காவலில் எடுத்து விசாரணை
/
யானை தந்த பொம்மை கடத்தல் கும்பல் வனத்துறை காவலில் எடுத்து விசாரணை
யானை தந்த பொம்மை கடத்தல் கும்பல் வனத்துறை காவலில் எடுத்து விசாரணை
யானை தந்த பொம்மை கடத்தல் கும்பல் வனத்துறை காவலில் எடுத்து விசாரணை
ADDED : நவ 30, 2024 05:59 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் யானை தந்த பொம்மைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் கடந்த 13ம் தேதி ஓட்டலில் தங்கி யானை தந்ததால் செய்த பல லட்சம் மதிப்புள்ள 4 பொம்மைகளை கடத்தி வந்து விற்க முயன்ற திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் விஸ்வநாதன் மனைவி ஈஸ்வரி, 50; கருப்புசாமி, 24; தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் முகமது ஜியாவுதீன், 50; அறந்தாங்கி ஜஸ்டிஸ், 46; உட்பட 12 பேரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதனையொட்டி, இவ்வழக்கில் சிறையில் உள்ள ஈஸ்வரி, ஜியாவுதீன், ஜஸ்டிஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி வனத்துறையினர் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனுதாக்கல் செய்தனர். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராதிகா, 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஒரு நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதனையொட்டி, மூவரையும், வனத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.