/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லீஸ்சத்திரம் புதிய அணைக்கட்டு தயார்! அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு
/
எல்லீஸ்சத்திரம் புதிய அணைக்கட்டு தயார்! அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு
எல்லீஸ்சத்திரம் புதிய அணைக்கட்டு தயார்! அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு
எல்லீஸ்சத்திரம் புதிய அணைக்கட்டு தயார்! அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு
ADDED : செப் 01, 2024 11:21 PM

விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் ஏனாதிமங்கலம், சுப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1949-1950ம் ஆண்டு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் காரணமாகவும், அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இந்த அணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டினை புனரமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், அணைக்கட்டினை புதியதாக கட்டுவதற்காக, முதல்வர் உத்தரவின்படி, கடந்த 2023-2024ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் 86 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனையடுத்து, புதிய அணை கட்டுவதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு, விரைந்து அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் நீர் கொள்ளளவு 5 அடியாக உள்ளது. தற்போது 4 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. நீரினை வெளியேற்றும் விதமாக வலதுபுற பிரதான கால்வாய்களான எரளுர் மற்றும் ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான வாய்க்கால்களான ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என 3 வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில், 'விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு 86 கோடியே 25 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதன் மூலம் மொத்தம் 13 ஆயிரத்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், அணைக்கட்டினை சுற்றியுள்ள 36 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும்' என்றார்.
அதனைத் தொடர்ந்து, ஏனாதிமங்கலத்தில், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டினை ஆய்வு செய்தார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், திருவெண்ணெய் நல்லுார் ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்திவேல், நீர்வளத்துறை, செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், தாசில்தார் ராஜ்குமார், ஏனாதிமங்கலம் ஊராட்சி தலைவர் விஜயன், பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், ரவி உடனிருந்தனர்