/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லீஸ் அணைக்கட்டு திறப்பு விழா ஏற்பாடு தீவிரம்
/
எல்லீஸ் அணைக்கட்டு திறப்பு விழா ஏற்பாடு தீவிரம்
ADDED : நவ 22, 2024 06:44 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்கட்டை முதல்வர் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை, கலெக்டர் பழனி பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு 28 மற்றும் 29ம் தேதி வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டினை நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.
இதனையொட்டி எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், 'ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டை திறந்து வைக்க உள்ளதால், எல்லீஸ் அணைக்கட்டு ஒட்டிய அணுகு சாலையில் 750 மீ., நீளத்திற்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, வழுதரெட்டியில் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான விழா மேடையும் அமைக்கப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது' என்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் ஒம்சிவசக்திவேல், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உத்தண்டி, நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் ஐயப்பன் உடனிருந்தனர்.