/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால தடுப்பு சுவர் பணி... தீவிரம்
/
எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால தடுப்பு சுவர் பணி... தீவிரம்
எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால தடுப்பு சுவர் பணி... தீவிரம்
எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால தடுப்பு சுவர் பணி... தீவிரம்
UPDATED : மே 23, 2025 07:38 AM
ADDED : மே 23, 2025 12:28 AM

விழுப்புரம்: விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால பணிகளில் இறுதிகட்டமாக தடுப்பு சுவர் அமைக்கும் பணியை வரும் ஜூன் 17ம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
விழுப்புரம் புறவழிச்சாலையில் எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கிறது. இப்பகுதியை அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கிறது.
இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கியது.
சென்னை - திருச்சி மார்க்கத்தில் 1 கி.மீ., துாரத்திற்கு கடந்த ஆண்டு இருபுறமும் சர்வீஸ் சாலை பணி துவங்கியது.
சென்னை மார்க்கத்தில் 300 மீ., தொலைவிற்கு இணைப்பு சாலை, திருச்சி மார்க்கத்தில் 400 மீ., தொலைவிற்கு இணைப்பு சாலை அமைத்து, மண் நிரப்பி சமன்படுத்தும் பணி நடந்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் மேம்பாலத்தில் இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும், இரு வாரங்களுக்கு முன், சென்னை - திருச்சி பைபாஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
இருந்த போதிலும், தடுப்பு சுவர் அமைக்கப்படும் இடத்தில், பேரல்கள் மற்றும் மண் மூட்டைகளை அடுக்கி, வாகனங்கள் வராத வகையில் தடுப்பாக அமைத்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நகாய் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. பைபாசில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதித்துள்ளோம்.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி, தடுப்பு சுவர் அமைக்கும் பணி முழுதும் வரும் ஜூன் 17ம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும்' என்றனர்.