/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்
/
இ.எஸ்., பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மார் 07, 2024 01:17 AM

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்.பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் தாளாளர் செந்தில்குமார், முகாமை துவக்கி வைத்தார். முதல்வர் சக்திவேல் வரவேற்றார். முகாமில் டி.வி.எஸ்., இண்டேன் லிமிடெட், மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை சென்னை, புதுச்சேரி அசோக் லைலாண்ட் உட்பட பல நிறுவனங்கள் பங்கேற்று நேர்காணல் நடத்தியது.
இதில், இறுதியாண்டு இயந்திரவியல், மின்னணுவியல், கணினியியல் துறைகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் தேர்வான மாணவர்களுக்கு தாளாளர் செந்தில்குமார், வேலைவாய்ப்பு ஆணையை வழங்கி பாராட்டினார்.

