sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆக்கிரமிப்பு வீடுகள் நாளை அகற்றம்; திண்டிவனத்தில் பெண்கள் கதறல் 

/

ஆக்கிரமிப்பு வீடுகள் நாளை அகற்றம்; திண்டிவனத்தில் பெண்கள் கதறல் 

ஆக்கிரமிப்பு வீடுகள் நாளை அகற்றம்; திண்டிவனத்தில் பெண்கள் கதறல் 

ஆக்கிரமிப்பு வீடுகள் நாளை அகற்றம்; திண்டிவனத்தில் பெண்கள் கதறல் 


ADDED : செப் 03, 2025 08:51 AM

Google News

ADDED : செப் 03, 2025 08:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாமென்று, அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திந்திரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், நகராட்சியின் நகரமைப்பு அலுவலர் திலகவதி தலைமையில் வருவாய்த்துறையினர் இன்றைக்கு அகற்றக்கோரி, ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளுக்கு இறுதி நோட்டீஸ் வழங்கினர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக திண்டிவனம் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,அர்ஜூனன் நேற்று காலை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மானை நேரில் சந்தித்து, பேசினார்.

மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு கலெக்டரும் பாதிக்கப்படும் மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் மாற்று இடம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார்.

இதை தொடர்ந்து நேற்று பிற்பகல் 12:30 மணியளவில், எம்.எல்.ஏ., அர்ஜூனன், தாசில்தார் யுவராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் சரவணன் உள்ளிட்டவர்கள் தீர்த்தக்குளம் பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது வீடுகளை இழக்கும் பெண்கள் பலர், நீண்ட காலமாக குடியிருந்து வருவதாகவும், தங்களை இதே இடத்தில் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.,விடம் கதறி அழுதனர்.

தொடர்ந்து வீடுகளை இழக்கும் பொதுமக்களுக்கு டி.பாஞ்சலம் பகுதியில் மாற்று இடம் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் என்று கலெக்டர் கூறியதை அவர் மக்களிடம் எடுத்துக்கூறினார்.

இதற்கிடையில் நாளை தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் போலீசார் துணையுடன் அகற்றப்பட உள்ளது. வீடுகளை இழந்து பாதிக்கப்படும் மக்கள் தற்காலிகமாக தங்க மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.






      Dinamalar
      Follow us