ADDED : டிச 22, 2025 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மின் பகிர்மான வட்டம் சார்பில் தேசிய மின்சிக்கன வார விழா நடந்தது.
விழாவிற்கு, மின்வாரிய தலைமை பொறியாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் குமார் முன்னிலை வகித்தார். ஏழுமலை பாலிடெக்னிக் முதல்வர் ராபர்ட் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். விழாவில், மின் சேமிப்பு பற்றியும், மின் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, மின்வாரிய அலுவலர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் நான்கு முனை சந்திப்பு அருகேவுள்ள துணை மின்நிலைய வளாகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் பெருந்திட்ட வளாகம் சென்று முடிவடைந்தது.

