/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உலக முதலீட்டாளர் மாநாடு தொடக்க விழா நேரலை விழுப்புரத்தில் தொழில்முனைவோர் பங்கேற்பு
/
உலக முதலீட்டாளர் மாநாடு தொடக்க விழா நேரலை விழுப்புரத்தில் தொழில்முனைவோர் பங்கேற்பு
உலக முதலீட்டாளர் மாநாடு தொடக்க விழா நேரலை விழுப்புரத்தில் தொழில்முனைவோர் பங்கேற்பு
உலக முதலீட்டாளர் மாநாடு தொடக்க விழா நேரலை விழுப்புரத்தில் தொழில்முனைவோர் பங்கேற்பு
ADDED : ஜன 08, 2024 05:17 AM

விழுப்புரம்: சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு தொடக்க விழா நிகழ்வை, விழுப்புரத்தில் கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில், தொழில் முனைவோர்கள் பார்வையிட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்னணு திரை வாயிலாக, உலக முதலீட்டாளர் மாநாடு துவக்க விழா நேரடி ஒளிபரப்பு நடந்தது.
கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் முன்னிலையில் நேரலையில் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கலெக்டர் கூறியதாவது:
தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள், 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்ட அரசின் பயணத்தின் ஒரு பகுதியாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதல்வர் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி வைத்துள்ளார். மாநாடு 2 நாட்கள் நடக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இதன் முக்கிய நோக்கமாகும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ன் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில், மாவட்ட தொழில் மையம் சார்பில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள், வணிகர்கள், தொழில் ஆர்வம் கொண்டவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையங்களில், பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நேரலை செய்யப்பட்டது.
தமிழகம் அனைத்து தொழில் துறைகளிலும் உயர்ந்த நிலை அடைய வேண்டும். அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்திட வேண்டும். தொழில் வளர்ச்சி பெருகி முதன்மை மாநிலமாக விளங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
எனவே, விழுப்புரம் மாவட்ட தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், முதலீட்டாளர்கள் மாநாட்டை அறிந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில், தொழில் முதலீட்டாளர்கள், கல்லுாரி மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், சிறு குறு தொழில் சங்கத் தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.