ADDED : ஜூலை 05, 2025 06:54 AM

மயிலம் : மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் நடந்தது.
சிவப்பிரகாசர் அரங்கில் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஒரு நாள் பயிற்சி முகாமில், மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
கல்லுாரி செயலர் ராஜீவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு துவக்க உரையாற்றினார்.
தமிழ் துறை உதவி பேராசிரியர் லட்சுமிதேவி வரவேற்றார். மகளிர் மேம்பாடு மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கான வேலை வாய்ப்பு குறித்து திண்டிவனம் மீனாட்சி அகாடமி நிர்வாக இயக்குனர் மீனாட்சி தையல் தொழிலில் புதிய யுத்திகள் குறித்து பேசினார்.
நிறைவாக கணினித்துறை பேராசிரியர் அனுராதா நன்றி கூறினார்.