/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார கலை நிகழ்ச்சி
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார கலை நிகழ்ச்சி
ADDED : ஜன 22, 2025 09:45 AM

விழுப்புரம் : தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, மத்திய அரசு சூழல் வனம், விழுப்புரம் மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாகன கலைநிகழ்ச்சி பிரசாரம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் துவக்கி வைத்தார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கெண்டனர். இதில், 9 நாட்டுப்புற கலை குழுவினர் கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகம், ஒயிலாட்டம் மூலம் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் பறையாட்டம் வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த குழுவினர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சூழல், திடக்கழிவு, மேலாண்மை, நீர் பாதுகாப்பு, பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி விழுப்புரம் பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், அரசு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சியை கரூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி ஒருங்கிணைத்தார்.