/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 21, 2024 08:18 AM

விழுப்புரம் : தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, மத்திய அரசின் சூழல் வனம் காலநிலை மாற்றம் துறை மற்றும் தேசிய பசுமைப்படை தகவல் வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த பிரசாரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் துவக்கி வைத்தார்.
இந்த பிரசார விழிப்புணர்வு வாகனம் புதிய பஸ் நிலையம், ஏழுமலை பாலிடெக்னிக், அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, பழைய பஸ் நிலையம், அரசூர் பகுதிகளுக்கு சென்றது.
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து, பவித்ரா, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்ரமணியன், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு பிரசாரத்தில் நாட்டுப்புற தொண்டு நிறுவன கலைக்குழுவினர், பாரம்பரிய கிராமிய ஒயிலாட்டம், கரகம், பறையாட்டம், வீதி நாடகம் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பை பொருட்கள் தவிர்த்தல், கால நிலை மற்றும் நீர் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், மண் வளம், இயற்கை வளம் காத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

