/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுச்சூழல் மேம்பாடு விழிப்புணர்வு
/
சுற்றுச்சூழல் மேம்பாடு விழிப்புணர்வு
ADDED : நவ 12, 2024 06:24 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம், அன்னியூர், மேல்ஒலக்கூர், செஞ்சி, விராட்டிக்குப்பம் ஆகிய அரசு பள்ளிகளில் பேச்சு, ஓவிய போட்டிகள், இயற்கை வலியுறுத்தும் மாணவர்கள் நடை பயணம், சமுதாய துாய்மை மற்றும் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்ரமணியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து, பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, கனிமவளத்துறை ஆய்வாளர் கண்ணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சங்கவி சிறப்புரையாற்றினர்.
தலைமை ஆசிரியர்கள் சேகர், ஏஞ்சலின் கோவிந்தன், பாலசுப்ரமணியன், மல்லி பிரபா, தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஊராட்சி தலைவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு, பசுமை உறுதிமொழியேற்றனர்.