/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
/
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 06:14 AM

செஞ்சி : செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். ஏ.பி.டி.ஓ.,க்கள் மணிமாறன், குமார், பழனி, ஒன்றிய உதவி பொறியார் அம்பிகா, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் பானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் வைத்து வழிபாடு நடத்தினர்.
அவலுார்பேட்டை
அவலுார்பேட்டை ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். அலுவலக வளாகத்தில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், வார்டு உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
திண்டிவனம்
ஒலக்கூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அலுவலக வளாகத்தில் புதுப்பானை வைத்து பொங்கல் வைத்து படையலிட்டனர். துணைச் சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ., நாராயணன், மேலாளர் ஏகாம்பரம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பி.டி.ஓ.,அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
பனப்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எழிலரசி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பூவராகவன், துணைத் தலைவர் குணா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி வள்ளி முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் வரவேற்றார். பள்ளியில் மாணவர்கள் சமத்துவ பொங்கலிட்டு படையலிட்டனர்.
விக்கிரவாண்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் அன்னை மகளிர் குழு சார்பில் நடந்த விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கி சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து படையலிட்டார். நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர் பிரியா பூபாலன், முன்னாள் கவுன்சிலர் பாலு, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.