/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா
/
த.வெ.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 08, 2025 06:16 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விக்கிரவாண்டி ஒன்றியம் கயத்துாரில் நடந்த விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் குஷி மோகன், மாவட்ட துணை தலைவர் வடிவேல்,மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தொண்டர் அணி தலைவர் சக்திவேல் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து பயனாளிகள் 400 பேருக்கு பொங்கல் பொருட்கள்,போர்வை ஆகியவைகள்அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார்.
ஒன்றிய தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர் காமராஜ், ஒன்றிய பொருளாளர் ரமேஷ் சக்திவேல், நகர தலைவர் சிவக்குமார் மற்றும் விக்கிரவாண்டி தொகுதி, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.