/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி முதலாம் ஆண்டு துவக்க விழா
/
இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி முதலாம் ஆண்டு துவக்க விழா
இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி முதலாம் ஆண்டு துவக்க விழா
இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி முதலாம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஜூலை 10, 2025 09:33 PM
விழுப்புரம்; விழுப்புரம் இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், முதல் மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசுகையில், 'கல்வியின் நோக்கம், மதிப்பெண் பெறுவது மட்டுமில்லை. வாழ்வை உயர்வாகவும், பொறுப்போடும் வாழ கற்று கொள்வது' என்றார்.
முதல்வர் தினேஷ வரவேற்றார். மெக்கானிக் துறை தலைவர் முத்துக்குமரன், 'மாணவர்கள் கற்று கொள்ளும் ஒவ்வொரு நுட்பமும் எதிர்கால தொழில்நுட்ப உலகில் அவர்களின் பாதையை செம்மையாக அமைக்கும்' என்றார். துறை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.துறை தலைவர் விஜய் சார்லஸ் நன்றி கூறினார்.