/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் அரசு ஊழியர்களுக்கான வினாடி, வினா போட்டிக்குத் தேர்வு
/
விழுப்புரத்தில் அரசு ஊழியர்களுக்கான வினாடி, வினா போட்டிக்குத் தேர்வு
விழுப்புரத்தில் அரசு ஊழியர்களுக்கான வினாடி, வினா போட்டிக்குத் தேர்வு
விழுப்புரத்தில் அரசு ஊழியர்களுக்கான வினாடி, வினா போட்டிக்குத் தேர்வு
ADDED : டிச 19, 2024 06:45 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி, வினா போட்டிக்கான தேர்வு 21ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பாக, விருதுநகர் மாவட்டத்தில், டிச.28ம் தேதி, மாநில அளவில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி நடக்கிறது.
இதற்காக, 38 மாவட்டங்களில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இறுதி போட்டிகளில் 12 குழுக்கள் தேர்வு செய்யப்படுவர்.
இறுதி போட்டியில் வெல்லும் முதல் குழுவிற்கு ரூ.2 லட்சமும், 2ம் குழுவிற்கு ரூ.1.5 லட்சமும், 3ம் குழுவிற்கு ரூ.1 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இதர குழுவினருக்கு ஊக்கப்பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட அளவிலான தேர்வு வரும் -21ம் தேதி விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத்துறை அலுவலர்களும், ஆசிரியர்களும்் இதில் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள், மனுவினை, டிச.20-க்குள், ஒருங்கிணைப்பாளரான மாவட்ட முதன்மை கல்வி அலுவரிடம் அளிக்கலாம், மேலும் விவரங்களுக்கு 9750974070, 7598371010, 9791868512, 8220894215 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.