/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற தேர்வு தொடர்பான ஆய்வு கூட்டம்
/
பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற தேர்வு தொடர்பான ஆய்வு கூட்டம்
பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற தேர்வு தொடர்பான ஆய்வு கூட்டம்
பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற தேர்வு தொடர்பான ஆய்வு கூட்டம்
ADDED : நவ 28, 2025 05:18 AM
வானுார்: வானுார் தாலுகாவிற்குட்பட்ட உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி மற்றும் தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
வானுார் அரசு கலைக்கல்லுாரியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் வில்லியம் வரவேற்றார். கூட்டத்தில், பயிற்றுவிக்கும் பாடப்பிரிவுகள், கல்லுாரியின் தற்போதைய வளர்ச்சி குறித்தும் முதன்மை கல்வி அதிகாரி கேட்டறிந்தார்.
எதிர்காலத்தில் இந்த பகுதியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் கல்லுாரியை நன்கு பயன்படுத்தி உயர் கல்வியில் சேரவேண்டும் வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாவட்ட கல்வி அதிகாரி சேகர், வணிகவியல் துறை தலைவர் தேவநாதன், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுரளி மற்றும் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.