/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெங்கட்ராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
வெங்கட்ராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 28, 2025 05:17 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆலத்துாரில் வேட்டை வெங்கட்ராய பெருமாள் மற்றும் கோதண்ட ராமர் கோவில்கள் உள்ளது.
இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிேஷக விழா, கடந்த 25ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்த கடம் புறப்பாடாகி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன், மரக்காணம் சேர்மன் தயாளன், ரமேஷ் டிராவல்ஸ் கலியமூர்த்தி, எம்.ஜி.ஆர்., பஸ் உரிமையாளர் முத்துகுமாரசாமி மற்றும் ஜே.வி.எஸ்., குடும்பத்தினர் பங்கேற்றனர்.
ஆலத்துார், மரக்காணம், புதுச்சேரி, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

