/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
/
வீடூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 25, 2025 06:25 AM

விக்கிரவாண்டி: வீடூர் அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வருவதால் மூன்றாவது நாளாக உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, கடந்த 22 ஆம் தேதி அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் ( 605 மில்லியன் கன அடி) 31.100 அடியை (534.528 மில்லியன் கன அடி) எட்டியது.
பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். மூன்றாவது நாளான நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 4836 கன அடி தண்ணீர் வந்தது.
அணையில் இருந்து 5461கன அடி தண்ணீரை வெளியேற்றினர். காலை 8:00 மணிக்கு வினாடிக்கு 3397 கன அடி தண்ணீர் வந்தது.
அணையில் இருந்து 4230 கன அடி தண்ணீரை வெளியேற்றினர். பகல் 12:00 மணிக்கு வினாடிக்கு, 3021 கன அடி தண்ணீர் வந்ததை அடுத்து அணையிலிருந்து அதே அளவு, 3021 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு 3450 கன அடி தண்ணீர் வந்து அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் ( 605 மில்லியன் கன அடி) 29.100 அடியை (394.383 மில்லியன் கன அடி) எட்டியது. அணை பாதுகாப்பு கருதி 3034 கன அடி தண்ணீரை அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக வெளியேற்றினர்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் அணையில் முகாமிட்டு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் அணையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

