/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம்
/
வீடூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 26, 2025 04:51 AM

விக்கிரவாண்டி: வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து வருவதால் நான்காவது நாளாக உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 22ம் தேதி அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 31.100 அடியை (534.528 மில்லியன் கன அடி) எட்டியது. அணை பாதுகாப்பு கருதி உபரி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.
நான்காவது நாளான நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2480 கன அடி நீர்வரத்து வந்தது. அணையில் இருந்து 2411 கன அடி நீர வெளியேற்றப்பட்டது.
காலை 8:00 மணிக்கு வினாடிக்கு 2411 கன அடி தண்ணீர் வரத்து வந்தது. அணையில் இருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டது. பகல் 12:00 மணிக்கு அணைக்கு நீர் வரத்து குறைந்து வினாடிக்கு 1401 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து 1820 கன அடி தண்ணீரை வெளியேற்றினர்.
மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு 1820 கன அடி தண்ணீர் வரத்து வந்தது. அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 29.100 அடியை (394.383 மில்லியன் கன அடி) எட்டியது. அணை பாதுகாப்பு கருதி 1820 கன அடி தண்ணீரை அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக வெளியேற்றினர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

