ADDED : அக் 01, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத் துறை சார்பில் கண்காட்சி நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார்.
கல்லுாரி செயலாளர் ராஜூவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் சிவசங்கரி கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.