UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 06:17 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகாவில் வெடி பொருள் தயாரிப்பு குடோன்களில், திடீர் ஆய்வு நடந்தது.
விக்கிரவாண்டி தாசில்தார் மகாதேவன் தலைமையில் விழுப்புரம், வெடி பொருள் துணை இயக்குனர் பர்வதம், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர், தீபாவளி பண்டிகையையொட்டி விக்கிரவாண்டி தாலுகாவில் பனப்பாக்கம், அய்யன் கோவில் பட்டு, சோழகனுார், அதனுார் சிறுவாலை பகுதிகளில் உள்ள வெடிபொருள் தயாரிப்பு குடோன்களில் பாதுகாப்பான முறையில் வெடிகள் தயாரிக்கப்படுகின்றனவா , அனுமதிக்கப்பட்ட அளவு வெடி மருந்துகள் உள்ளனவா என ‘திடீர்’ ஆய்வு செய்தனர்.
இதில், வி.ஏ.ஓ., க்கள், கிராம உதவியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
