/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெற்பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
/
நெற்பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : நவ 19, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள், நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செய்திக்குறிப்பு:
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல்-2 பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, காப்பீடு செய்ய கடைசி தேதியாக வரும் 30ம் தேதி என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

