நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மயிலத்தில் நடந்தது.
முகாமிற்கு மணிலா நகர் அரிமா சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர்கள் விஜயகுமார், முருகன் பொருளாளர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ராகவன் முன்னிலை வகித்தனர். சிவக்குமார் வரவேற்றார்.
முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அனிஷா தலைமையில் டாக்டர்கள் குழுவினர், 110 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். 25 பேர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாவட்ட தலைவர்கள் பாபு, பாலாஜி, வெங்கடேசன், சுரேஷ், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.