ADDED : டிச 10, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடந்தது.
மேலாண் இயக்குநர் குணசேகரன் முகாமை துவக்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார். மருத்துவ குழுவினர், ஊழியர்களுக்கு கண் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.
முகாமில், கண் மற்றும் உயர் ரத்தஅழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. 485 பேர் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
பொது மேலாளர்கள் ரவீந்திரன், துரைசாமி, துணை மேலாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

