ADDED : டிச 10, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் வட்டார பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் காச நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் பெரமண்டூரில் நடந்தது.
முகாமிற்கு, மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கினார். முப்புளி சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரூபி ரோஷனா வரவேற்றார். மயிலம் வட்டார நடமாடும் மருத்துவ குழுவினர் டாக்டர் தனலட்சுமி மேற்பார்வையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊராட்சி உறுப்பினர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாலகுமரன், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன் காச நோய் முது நிலை மேற்பார்வையாளர் விஜயகாந்த் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

