/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள பட்டியலை பார்க்க வசதி
/
போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள பட்டியலை பார்க்க வசதி
போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள பட்டியலை பார்க்க வசதி
போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள பட்டியலை பார்க்க வசதி
ADDED : டிச 29, 2024 06:23 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் சம்பள பட்டியலை, இனி ஊழியர்கள் மொபைல் போன் மூலம் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) சார்பில், பணியாளர்களின் மாதாந்திர சம்பள பட்டியல் நகல் மாதந்தோறும், பணியாளர்கள் பணியாற்றி வரும் கிளை மற்றும் பிரிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறை, தற்போது அனைத்து பணியாளர்களின் வசதிக்காக எளிதான முறையில், இணைய தளம் வழியாக அவர்களது மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மண்டலங்களில் பணியாற்றும் 18,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.