/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எலவனாசூர்கோட்டையில் போலி டாக்டர் கைது
/
எலவனாசூர்கோட்டையில் போலி டாக்டர் கைது
ADDED : டிச 07, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 52;இவர், எலவனாசூர்கோட்டையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மருத்துவமனையை, எலவனாசூர்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, ஆய்வு செய்தபோது, மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து கோவிந்தனை கைது செய்தனர்.